உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது

கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது

விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் நகரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில், கடந்த 2020ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில், கடலுார் மாவட்டம், மணமேடு அடுத்த மலையபெருமாள் அகரத்தைச் சேர்ந்த, முக்கிய குற்றவாளியான சேகர் மகன் விவேக், 37; என்பவரை போலீசார், கைது செய்தனர். அந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில், கடந்த 2024ம் ஆண்டு, இந்த கோர்ட்டில் ஆஜராகாமல், தலைமறைவானார். இதனால், விழுப்புரம் கோர்ட் பிடி ஆணை பிறப்பித்தது. இதனையடுத்து, விழுப்புரம் டவுன் இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் தலைமையிலான போலீசார், அவரை தேடி வந்தனர். இந்நிலையில், கோலியனுார் கூட்ரோடு பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்த விவேக்கை, 37; நேற்று விழுப்புரம் டவுன் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி