மேலும் செய்திகள்
திருவதிகை கோவில்களில் உண்டியல் திறப்பு
25-Oct-2024
கோட்டக்குப்பம்: கீழ்புத்துப்பட்டு மஞ்சினீஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கையாக 13 லட்சத்து 21 ஆயிரம் இருந்தது.கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டு மஞ்சினீஸ்வரர் கோவில் உண்டியல் கடந்த ஜூன் மாதம் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது.அதன் பிறகு நேற்று இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. 3 உண்டியல்களில் இருந்த காணிக்கைகளை கோவில் ஊழியர்கள் எண்ணி முடித்தனர். இதில், 13 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயும், 32.62 மில்லி கிராம் தங்கமும், 313 கிராம் வெள்ளியும் இருந்தன. உண்டியல் எண்ணிக்கையின் போது, இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் உமாமகேஸ்வரி, செயல் அலுவலர் கலையரசி உடனிருந்தனர்.
25-Oct-2024