உள்ளூர் செய்திகள்

மண்டலாபிஷேகம்

விழுப்புரம், : அன்னியூர் பூர்ணா, புஷ்கலா சமேத நீர்காத்த அய்யனாரப்பன் கோவிலில் மண்டலாபிஷேகம் நடந்தது.இக்கோவிலில், கும்பாபிஷேகம் நடந்ததை தொடர்ந்து, மண்டலாபிஷேகம், 48வது நாள் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து அய்யனாரப்பனுக்கு திருக்கல்யாண வைபவத்தை கண்ணன், அருணாசலம் குருக்கள் தலைமையிலான குழுவினர் செய்தனர்.நிகழ்ச்சியில் மணமகன் வீட்டார் தரப்பில் செல்வமூர்த்தி, ராஜேஸ்வரி தம்பதியினரும், மணமகள் தரப்பில் அய்யனார், ராஜேஸ்வரி தம்பதியினர் பங்கேற்றனர். கோவில் நிர்வாகிகள் வீரபுத்திரன், ராமமூர்த்தி, நாகப்பன், ஏழுமலை உட்பட கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை