உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மண்டலாபிேஷகம் நிறைவு விழா

மண்டலாபிேஷகம் நிறைவு விழா

விழுப்புரம்: ஆனாங்கூர் அழகுமுத்து மாரியம்மன் கோவிலில் மண்டலாபிேஷக நிறைவு விழா நடந்தது.விழுப்புரம் அடுத்த ஆனாங்கூர் விநாயகர், அழகுமுத்து மாரியம்மன் கோவிலில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நடந்த 48 நாள் மண்டலாபிேஷக பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது. அதனையொட்டி, பக்தர்கள் சுவாமிக்கு சீர்வரிசை பொருட்கள் மற்றும் பால் குடங்கள் ஏந்தி ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.மாலை 6:00 மணிக்கு ஜம்புமக ரிஷி, ரேணுகாம்பாள் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் கனிமொழி மற்றும் கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ