மாசில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம்
விழுப்புரம்: விழுப்புரத்தில், மாசில்லா தீபாவளிப் பண்டிகை தொடர்பான விழிப்புணர்வு வாகன பிரசாரம் துவங்கியது. விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் இருந்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 'மாசில்லா தீபாவளிப் பண்டிகை' தொடர்பான விழிப்புணர்வு வாகனங்கள் பிரசாரத்திற்கு புறப்பட்டன. இந்த வாகனங்களை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், கொடியசைத்து துவக்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் டாக்டர் ராஜேந்திரன், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ( பயிற்சி) இளவரசி, மாவட்ட உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் இளையராஜா, உதவி பொறியாளர்கள் சங்கவி, ராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.