உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயிலம் செண்டூர் சாலை விரிவாக்க பணிகள் துரிதம்

மயிலம் செண்டூர் சாலை விரிவாக்க பணிகள் துரிதம்

விழுப்புரம்; மயிலம் செண்டூர் சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடக்கிறது.விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம், திருவக்கரை, பஞ்சவாடி, ஆரோவில் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா ஸ்தலங்கள் உள்ளது. இப்பகுதிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் வாகனங்கள் தினசரி வந்து செல்கிறது.இதை தமிழ்நாடு அரசு கருத்தில் கொண்டு மயிலம் செண்டூர் சாலை 3.75 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூபாய் 3 கோடியே 77 லட்சம் செலவில் புதியதாக சாலை விரிவாக்கம் பணிநடைபெற்று வருகிறது. இதற்காக சாலை ஓரத்தில் பழைய மண்ணை எடுத்துவிட்டு புதியதாக கிராவல் கொட்டும் பணியும் நடக்கிறது.தற்பொழுது இந்த ரோடு ஒரு வழி பாதையாக உள்ளது. இதை மாற்றி இரு வழி பாதையாக விரிவாக்கம் செய்து வருகின்றனர்.மயிலம் சிவக்குமார் எம்.எல்.ஏ. மயிலம் செண்டூர் சாலையை விரிவு படுத்த வேண்டும் என பலமுறை தமிழ்நாடு முதலமைச்சர், மற்றும் உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு ரூபாய் 3 கோடியே 77லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ