உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம் ..

திண்டிவனம்: திண்டிவனத்தில், கண், காது, தொண்டை தொடர்பான சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடந்தது. திண்டிவனம் ஹோஸ்ட் லயன்ஸ் கிளப், மெட்ராஸ் இ.என்.டி., ரிசர்ச் பவுண்டேஷன், ராம் டெக்ஸ்டைல்ஸ் சார்பில் வாசவி பள்ளியில் நடந்த முகாமிற்கு, ஏழுமலை தலைமை தாங்கினார். செயலாளர் சுகுமார் வரவேற்றார். தலைமை ஆசிரியர் மணிமேகலை, சந்தானம் முகாமை துவக்கி வைத்து பேசினர்.முகாமை பள்ளி தாளாளர்கள் ரங்கமன்னார், வெங்கடேசன் துவக்கி வைத்தனர். அரிமா சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.டாக்டர் ரஜிகா ராமகிருஷ்ணன், மஞ்சு பார்கவி ஆகியோர் பள்ளி குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். பொருளாளர் நவநீதம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ