நெசவாளர்களுக்கு மருத்துவ முகாம்
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு பொது மருத்துவ முகாம் நடந்தது.முகாமிற்கு, மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் ஸ்ரீதேவி, துணைத் தலைவர் ஜீவானந்தம், ஒன்றிய கவுன்சிலர் மீனாகுமாரி முன்னிலை வகித்தனர். கடலுார் சரக கைத்தறி உதவி இயக்குனர் இளங்கோவன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் டாக்டர் வைதேகி தலைமையிலான மருத்துவக் குழுவினர் நெசவாளர்களுக்கு பொதுமருத்து சிகிச்சை அளித்தனர்.கண்டாச்சிபுரம், மடவிளாகம், அங்குராயநத்தம் பகுதிகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் பயனடைந்தனர்.சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில் செவிலியர்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை கண்டாச்சிபுரம் கைத்தறித்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் செய்திருந்தனர்.