உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனநலம் மற்றும் நல்வாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மனநலம் மற்றும் நல்வாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டிவனம்; திண்டிவனம் நகர அரிமா சங்கம் சார்பில் மனநலம் மற்றும் நல்வாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திண்டிவனம் நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, அரிமா சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட வாராந்திர சேவைகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் கிரிதரபிரசாத் வரவேற்றார். அரிமா சங்க சாசன தலைவர் தேவ், மாவட்ட சேவைகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், பள்ளி தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் வாழ்த்தி பேசினார். மாவட்ட ஆளுநர் ராஜா சுப்ரமணியம், மனநல மற்றும் நல்வாழ்வு விழிப்புணர்வு பற்றி மாணவர்களிடையே பேசினார். மனவளக்கலை பயிற்றுனர் ராஜேந்திரன், மாணவர்களுக்கு யோகாசனம் செய்முறை விளக்கம் அளித்தார். அப்போது, சங்க உடனடி முன்னாள் தலைவர் துரைமுருகன், உறுப்பினர்கள் ரசின் முகமது, குருநாதன், செயலாளர் சடகோபன் உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் குருநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி