/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / எல்நினோ தாக்கத்தால் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை குறையும்: வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் பேட்டி
எல்நினோ தாக்கத்தால் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை குறையும்: வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் பேட்டி
விழுப்புரம்: எல்நினோ தாக்கத்தினால் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட குறையும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறினார். விழுப்புரத்தில் அவர் , நிருபர்களிடம் கூறியதாவது: பசுபிக் பெருங்கடலில் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக இயல்பை விட வெப்பநிலை மாற்றம் அதிகரித்துள்ளது. இதனால், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட குறையும். ஜூன் முதல் செப்டம்பர் இறுதி வரை வெப்பநிலை நீடிக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட கடலோர மாவட்டங்களில் அதிக மழை இருக்கும். புயல் குறுகிய காலத்தில் தீவிரமடையும் என்பதால் அதற்கேற்றவாறு பயிர்களை நடவு செய்ய வேண்டும். வெப்பத்திலிருந்து பாதுகாக்க மரக்கன்று நடவு செய்ய வேண்டும். மழை நீரை சேகரிக்க வேண்டும். இவ்வாறு ஹேமச்சந்திரன் கூறினார்.