உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தியாகிகள் உருவ சிலைக்கு அமைச்சர் அஞ்சலி

தியாகிகள் உருவ சிலைக்கு அமைச்சர் அஞ்சலி

விழுப்புரம்:இடஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு அமைச்சர் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. விழுப்புரம் வழுதரெட்டியில் உள்ள இடஒதுக்கீடு போராட்டத்தில் இறந்த தியாகிகள் மணி மண்டபத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, தியாகிகளின் உருவசிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, எம்.எல்.ஏ.,க்கள் பொன்முடி, லட்சுமணன், மஸ்தான், அன்னியூர் சிவா, முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் புஷ்பராஜ், மாசிலாமணி, சேதுராமன், செந்தமிழ்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை