மேலும் செய்திகள்
துணை முதல்வர் பிறந்த நாள் விழா
30-Nov-2024
திண்டிவனம், ; திண்டிவனம்-நொளம்பூர் ரோட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள டி.கே.பி., பெட்ரோல் பங்கை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார். ஒலக்கூர் ஒன்றியம், திண்டிவனம்-நொளம்பூர் ரோட்டிலுள்ள நொளம்பூரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள டி.கே.பி.,டிரேடர்சின் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் திறப்பு விழா நேற்று நடந்தது. புதுச்சேரி மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவாதலைமை தாங்கினார். விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். பெட்ரோல் பங்க் உரிமையாளரான விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ் வரவேற்றார். பெட்ரோல் பங்க்கை வனத்துறை அமைச்சர் பொன்முடி குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். திறப்பு விழாவில், முன்னாள் அமைச்சர் மஸ்தான், புதுச்சேரி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மாவட்ட விற்பனையாளர் நிஷான்ந்திவாரி, மாவட்ட பஞ் சாயத்து தலைவர்ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், சீத்தாபதிசொக்கலிங்கம், ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் ராஜாராம், பழனி, தயாளன், திண்டிவனம் நகர்மன்ற தலைவர் நிர்மலாரவிச்சந்திரன், துணை தலைவர் ராஜலட்சுமிவெற்றிவேல், முன்னாள் நகர செயலாளர் கபிலன், பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், செயற்குழு உறுப்பினர் சின்னச்சாமி, வழக்கறிஞர் அசோகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் உதயகுமார், பாபு, விஜயகுமார், அண்ணாமலை, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்முருகன், மாவட்ட பிரதிநிதி முருகன், கவுன்சிலர்கள் நந்தகுமார், சத்தீஷ், சுதாகர், பிர்லாசெல்வம், பரணிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்திருந்தவர்களை சுபத்ராரமேஷ், வழக்கறிஞர்கள் கவுதம், கிேஷார் ஆகியோர் வரவேற்றனர்.
30-Nov-2024