மேலும் செய்திகள்
தேசிய திருநங்கைகள்தினம் கொண்டாட்டம்
16-Apr-2025
திருநங்கைகளுக்கு உயர்கல்வி நிதியுதவி
04-May-2025
விழுப்புரம்: தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில், விழுப்புரத்தில் 'மிஸ் திருநங்கை' இன்று (11ம் தேதி) நடக்கிறது. விழுப்புரத்தில் தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவர் ஜீவா நாயக் கூறியதாவது;கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை யொட்டி, விழுப்புரத்திற்கு வரும் திருநங்கைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் மிஸ் கூவாகம், மிஸ் திருநங்கை விழா நடத்துவது வழக்கம். விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகரட்சி திடலில், இன்று மாலை 5.00 மணிக்கு, மிஸ் திருநங்கை நடக்கிறது. திருநங்கைகளுக்கு பல நலத்திட்டங்களை வழங்கிய அரசுக்கு நன்றி கூறுவதோடு, கல்வி, வேலைவாய்ப்பில் சிறந்து விளங்கும் திருநங்கைகள் அணிவகுப்பு, கவுரவித்தல், மிஸ் திருநங்கை தேர்வு, நடனம், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவில், முன்னாள் அமைச்சர் பொன்முடி உட்பட எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். நடிகர் விஷால் உட்பட சினிமா நடிகர்கள் பங்கேற்க உள்ளனர் என கூறினார்.
16-Apr-2025
04-May-2025