உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புயல் நிவாரண உதவி எம்.எல்.ஏ., தொடங்கி வைப்பு

புயல் நிவாரண உதவி எம்.எல்.ஏ., தொடங்கி வைப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அய்யங்கோவில்பட்டு, முத்தாம்பாளையம் ஊராட்சிகளில், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசின் நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டது.லட்சுமணன் எம்.எல்.ஏ., பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்தினருக்கும் 2,000 ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கி தொடங்கி வைத்தார். மேலும், 5 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, 1 கிலோ சர்க்கரை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.ஆர்.டி.ஓ., முருகேசன், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், துணை சேர்மன் உதயகுமார், தி.மு.க., ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, துணைச் செயலாளர் ஜெயா பன்னீர்செல்வம், கிளைச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் ஊராட்சி தலைவர்கள், தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை