ரூ.3.67 கோடியில் உயர் மட்ட பாலம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
செஞ்சி: கீழ் மாம்பட்டு - ரெட்டணை இடையே ஈச்சூர் கிராமத்தில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. வல்லம் அடுத்த கீழ்மாம்பட்டு கிராமத்தில் இருந்து ரெட்டணை செல்லும் வழியில் ஈச்சூர் கிராமத்தில் உள்ள தரைப் பாலத்தை 3.67 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலமாக கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. வல்லம் ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். மஸ்தான் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, தலைமை தீர்மான குழு உறுப்பினர் சிவா, ஒன்றிய செயலாளர் துரை, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தியாகராஜன், உதவி பொறியாளர்கள் பாஸ்கர், ராமு, சேகர். ஒன்றிய கவுன்சிலர்கள் கமிசலா மாரிமுத்து, ரேணுகா வேலாயுதம், விஜயா கண்ணன், கலைவாணி கிருஷ்ணமூர்த்தி, பத்மநாபன், ஊராட்சி தலைவர்கள் ராஜகோபால், சரஸ்வதி, சத்தியமூர்த்தி, துணைத்தலைவர் பரிதா அன்வர் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.