உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உழவர் சந்தையில் எம்.எல்.ஏ., ஆய்வு

உழவர் சந்தையில் எம்.எல்.ஏ., ஆய்வு

திண்டிவனம்: திண்டிவனம் உழவர்சந்தையில் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். திண்டிவனம் உழவர்சந்தையில் 64 கடைகள் உள்ளன. இக்கடைகளில் மஸ்தான் எம்.எல்.ஏ., நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். விழுப்புரம் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) சுமதி எம்.எல்.ஏ.,விடம், 'உழவர்சந்தையின் உள்பகுதியில் பேவர் பிளாக் கற்கள் அமைத்து தரவேண்டும், கூடுதலாக ஒரு நுழைவு வாயில் அமைக்க வேண்டும். காலியாக உள்ள இடத்தில் கூடுதலாக 16 கடைகள் அமைத்து தரவேண்டும். வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும். கண்காணிப்பு கேமரா அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தார். ஆய்வின் போது, உழவர்சந்தை நிர்வாக அலுவலர் கருப்பையா, வேளாண் உதவி இயக்குநர் சரவணன், தி.மு.க., நகர செயலாளர் கண்ணன், கவுன்சிலர்கள் செல்வம், ரவிச்சந்திரன், ஷபியுல்லா, சத்தீஷ், மாவட்ட வர்த்தகர் அணி துணை தலைவர் பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை