அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ., ஆய்வு
மயிலம் : மயிலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிவக்குமார் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.ஆய்வின்போது சுகாதார வசதிகள் மற்றும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனை வளாகம் துாய்மையாக பராமரிக்கப்படுகிறதா என பார்வையிட்டார். நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர மருத்துவர்களிடம் கேட்டு கொண்டார்.மேலும், கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவிக் கொண்டிருப்பதால் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். பா.ம.க., இளைஞர் அணி அமைப்பாளர் பிரேம்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் தேசிங்கு, மாநில பொதுக்குழு உறுப்பினர் செங்கேணி, கட்சி நிர்வாகிகள் சுரேஷ், மின்னல் முருகன், சக்திவேல், ஏழுமலை, கலையரசன் உடன் இருந்தனர்.