உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பியூட்டி பார்லரில் பணம் வெள்ளி சிலை திருட்டு

பியூட்டி பார்லரில் பணம் வெள்ளி சிலை திருட்டு

விழுப்புரம்; விழுப்புரத்தில் பியூட்டி பார்லரின் பூட்டை உடைத்து பணம் மற்றும் வெள்ளி விநாயகர் சிலையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். ஃ விழுப்புரம், வண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மனைவி ராஜலட்சுமி,49; இவர், கடந்த 1ம் தேதி இரவு 7.30 மணிக்கு சுதாகர் நகரில் உள்ள தனது பியூட்டி பார்லர் கடையை பூட்டி சென்றார். மறுநாள் 2ம் தேதி காலை 10.30 மணிக்கு ராஜலட்சுமி வந்து பார்த்த போது, கடையின் முன்பக்க ெஷட்டரின் பூட்டு உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, டிராவை உடைத்து மர்ம நபர்கள் ரூ.30 ஆயிரம் ரொக்கம், 15 கிராம் வெள்ளி விநாயகர் சிலை திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !