கனமழை மீட்பு பணி நிலவரம் குறித்து கண்காணிப்பு அதிகாரி ஆய்வு கூட்டம்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை மீட்பு பணி நிலவரம் குறித்து, கண்காணிப்பு அதிகாரி தலைமையிலான ஆய்வுக்கூட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கண்காணிப்பு அதிகாரி சுன்சோங்கம் ஜடக்சிரு தலைமை தாங்கினார். கலெக்டர் பழனி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய்நாராயணன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் தாக்கத்தால் ஏற்பட்ட கனமழை பாதிப்புகள் குறித்தும், வெள்ள மீட்பு பணிகள், உயிரிழப்புகள், கால்நடை பாதிப்புகள், வீடு, விவசாய நிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள், மீட்பு பணிகளின் நிலவரம் குறித்து, கண்காணிப்பு அதிகாரி கேட்டறிந்து தொடர் பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.இதனையடுத்து, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு, கனமழை குறித்த புகார்கள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, கண்காணிப்பு அதிகாரி கேட்டறிந்தார்.