உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பருவமழை முன்னெச்சரிக்கை பயிற்சி கூட்டம்

 பருவமழை முன்னெச்சரிக்கை பயிற்சி கூட்டம்

திண்டிவனம்: வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான பயிற்சி கூட்டம் நடந்தது. ஒலக்கூர் வட்டார யூனியன் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஒலக்கூர் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெற்றிவேல், மோகனா, மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சிவசங்கர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுடர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வடகிழக்கு பருவ மழை கால டெங்கு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கூட்டத்தில் டெங்கு உறுதிமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்