உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 20 நாட்களே ஆன குழந்தையை நீரில் மூழ்கடித்து கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தாய் விக்கிரவாண்டியில் பயங்கரம்

20 நாட்களே ஆன குழந்தையை நீரில் மூழ்கடித்து கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தாய் விக்கிரவாண்டியில் பயங்கரம்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் காதல் திருமணம் செய்த பெண், தனது பச்சிளம் குழந்தையை நீரில் மூழ்கடித்து கொலை செய்து தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியைச் சேர்ந்தவர் புனிதன், 21; சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி பவுசியா, 21; ஓராண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.திருமணமான சில மாதங்களில் கர்ப்பமான பவுசிய மனநலம் பாதிக்கப்பட்டார். இதற்காக சிகிச்சையும் பெற்றுள்ளார்.கடந்த 20 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்து, இஸ்வான் என பெயரிட்டனர். குழந்தை பிறந்ததால் தனது தாய் வீடான உஸ்மான் நகரில் தங்கியிருந்தார்.இந்நிலையில் நேற்று மாலை 4:00 மணியளவில் பவுசியா வீட்டில் துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடன் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டனர். அப்போது அவர் தனது குழந்தை இஸ்வானை பக்கெட் தண்ணீரில் மூழ்கடித்து சாகடித்து விட்டேன். அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள துாக்கு போட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது பக்கெட் நீரில் குழந்தை இஸ்வான் இறந்த நிலையில் மீட்டனர். மேலும், பவுசியாவை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று குழந்தையின் உடலை மீட்டு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பவுசியாவிடம், விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் வாக்கு மூலம் பெற்றார். இந்த சம்பவம் விக்கிரவாண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை