உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புறவழிச்சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி

புறவழிச்சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி

பாகூர் : குருவிநத்தம் - முள்ளோடை சாலை புறவழிச்சாலை சர்வீஸ் ரோடு சந்திப்பில், பல மாதங்களாக மழை நீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், மேம்பாலம் மற்றும் உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. கிராமங்களை இணைக்கும் வகையில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சாலை இணையக்கூடிய மேம்பாலம் சந்திப்பின் கீழ் பகுதியில் எந்த வித பணிகளும் மேற்கொள்ளப்படாமல் விடப்பட்டுள்ளது. அங்கு, மழை நீர் தேங்கி நிற்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.குறிப்பாக, குருவிநத்தம் - முள்ளோடை சாலையில், புறவழிச்சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பல மாதங்களாக மழை நீர் தேங்கி நிற்பதால், அப்பகுதி சேரும், சகதியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொது மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ