மவுண்ட் பார்க் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் மாவட்ட அளவில் சாதனை
தியாகதுருகம்: தியாகதுருகம் மவுண்ட் பார்க் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பள்ளியின் தேர்ச்சி 100 சதவீதம் ஆகும். பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவி சாய் சர்விகா 483 மதிப்பெண் பெற்று, மாவட்ட அளவில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். இவர் பாடவாரியாக கணக்கு 97, இயற்பியல் 95, வேதியியல் 99, உடற்கல்வி பாடத்தில் 94 மதிப்பெண் பெற்றுள்ளார். சையத் ரிஹான் 468 மதிப்பெண் பெற்று பள்ளியில் 2ம் இடம், மாணவர் தேவன் 466 மதிப்பெண் பெற்று 3ம் இடம் பெற்றனர். தேர்வு எழுதிய 96 சதவீதம் மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர் மேகந்த் 488 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் 3ம் இடம் பெற்று சாதனை படைத்தார். இவர் பாடவாரியாக ஆங்கிலம் -96, கணக்கு- 98, அறிவியல் -94, தமிழ் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய இரு பாடங்களிலும் சென்டம் எடுத்துள்ளார். மாணவர் முகேஷ் 482 மதிப்பெண் எடுத்து பள்ளியில் 2ம் இடம், மாணவி கவிதா 477 மதிப்பெண் பெற்று 3ம் இடம் பெற்றனர்.தேர்வு எழுதிய 90 சதவீதம் மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.தமிழில் 6, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் 7 பேர் சென்டம் எடுத்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தாளாளர் மணிமாறன் பரிசு மற்றும் வெற்றி கேடயம் வழங்கி பாராட்டினார். முதல்வர் சுஜாதா, துணை முதல்வர் பூபாலகண்ணன், பொறுப்பாசிரியர் சுபைதா உடன் இருந்தனர்.