மேலும் செய்திகள்
பள்ளிகளில் ஆண்டுவிழா கொண்டாட்டம்
25-Mar-2025
திண்டிவனம்: திண்டிவனம் நேஷனல் தொடக்கப் பள்ளியில் 123வது ஆண்டு விழா நடந்தது.பள்ளி நிர்வாகி ராம்டெக்ஸ் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் ஷீலாதேவி வரவேற்றார். நிர்வாக குழு தலைவர் பி.ஆர்.எஸ்.துணிக்கடை ரங்கமன்னார், பொருளாளர் தினகரன், ஓய்வு பெற்ற முதுகலை ஆசிரியர் வீரராகவன் ஆகியோர் பேசினர்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில், ஆசிரியர் பயிற்றுநர் ஸ்ரீமுல்லை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மோகன்தாஸ், வாசவி பள்ளி தலைமையாசிரியை மணிமேகலை உட்பட பலர் பங்கேற்றனர்.பள்ளி ஆசிரியை கோமதி நன்றி கூறினார்.
25-Mar-2025