உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இயற்கை அரிசி பாரம்பரிய விதை திருவிழா

இயற்கை அரிசி பாரம்பரிய விதை திருவிழா

விழுப்புரம்:விழுப்புரத்தில் பசுமை இயற்கை விவசாயம் இயக்கம் சார்பில், இயற்கை அரிசி மற்றும் பாரம்பரிய விதை திருவிழா நேற்று துவங்கியது.ஜெயசக்தி திருமண மண்டபத்தில் நடந்த விழாவை, புதுச்சேரி முன்னோடி விவசாயி சுப்ரமணி துவக்கி வைத்தார். பசுமை இயற்கை விவசாய இயக்கம் ராமமூர்த்தி, பாண்டி யன், ஏழுமலை முன்னிலை வகித்தனர்.கண்காட்சியில், காட்டுயானம், சீரக சம்பா, சிவன் சம்பா, கருடன் சம்பா, குதிரைவாலி, சம்பா கருங்குருவை, மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய அரிசி ரகங்களும், பாரம்பரிய நெல் விதைகளும் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது.மதியம் 2.00 மணிக்கு பல்வேறு வகையான பாரம்பரிய அரிசியில் சமைக்கப்பட்ட உணவு திருவிழாவும், கருத்தரங்கமும் நடந்தது. மாலையில், பாரம்பரிய அரிசியில் தயார் செய்த இட்லி கண்காட்சி நடந்தது. ஏராளமான பொதுமக்களும், விவசாயிகளும் கலந்துகொண்டனர். தொடர்ந்து, 25ம் தேதி வரை, இந்த பாரம்பரிய கண்காட்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை