உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பட்டாசு வெடித்த தகராறில் வாலிபர் கொலை வடமாநில தொழிலாளி கைது

பட்டாசு வெடித்த தகராறில் வாலிபர் கொலை வடமாநில தொழிலாளி கைது

விக்கிரவாண்டி: பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தகராறில் வாலிபரை கொலை செய்த வட மாநில தொழிலாளரை போலீசார் கைது செய்தனர்.பீகார் மாநிலம் மதேபுரா மாவட்டம், சுவாபட்டியைச் சேர்ந்தவர் ரேடன் திசுதேவ் மகன் சுகன் ரிஷிதேவ்,31; தேமபெல்லாவைச் சேர்ந்த நாகோரஷிதேவ் மகன் தில்குஷ்குமார்,21; இருவரும் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த ஒரத்துார் கிராமத்தில் தங்கி, அங்குள்ள தனியார் உர தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர்.தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு இருவரும் பட்டாசு வெடித்த போது தில்குஷ்குமார் பட்டாசை கொளுத்தி சுதன் ரிஷிதேவ் மீது போட்டுள்ளார். அதில், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த தில்குஷ்குமார், சுதன் ரிஷிதேவை கீழே தள்ளினார். அதில், தலையில் படுகாயமடைந்த சுதன் ரஷிதேவ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார், கொலை வழக்கு பதிந்து தில்குஷ் குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ