மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்
16-Mar-2025
விழுப்புரம்; விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் 7 நாள் சிறப்பு முகாம் நடந்தது.வி.பூதுாரில் நடந்த துவக்க விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் வாசன் வாழ்த்தி பேசினார். திட்ட அலுவலர் சத்யா வரவேற்றார். துறை தலைவர்கள் சேட்டு, கார்த்திகே யன், லட்சுமி நாராயணன், சிவராமன், வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.பேராசிரியர்கள் சிவராமன், அசோகன், டாக்டர் அசோக்குமார் சிறப்புரையாற்றினர். பூ.கரைமேடு, பூசாரிப்பாளையம், மாங்குப்பம், கெ.கரைமேடு, கெங்கராம்பாளையம் கிராமங்களில், சுற்றுச்சூழல் பாது காப்பு, சாலை சீரமைப்பு, 300 மரக்கன்று நடுதல், யோகா பயிற்சி, மருத்துவ முகாம், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடந்தது.முகாம் நிறைவு விழா கெங்கராம்பாளையத்தில் நடந்தது.
16-Mar-2025