உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வேன் மோதிய விபத்தில் ஒருவர் பலி: 2 பேர் படுகாயம்

வேன் மோதிய விபத்தில் ஒருவர் பலி: 2 பேர் படுகாயம்

கண்டமங்கலம்; கண்டமங்கலம் அருகே பைக் மீது வேன் மோதியவிபத்தில் ஒருவர் இறந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.வானுார் அருகே உள்ள காட்ராம்பாக்கம் பகுதியை சேர்ந்த குமார் 50; , அருவாபாக்கத்தை சேர்ந்த ரமேஷ் 45; உப்புவேலுார் சேர்ந்த ஏழுமலை 62; ஆகிய மூவரும் சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருகின்றனர். இவர்கள் வைத்திருந்த ஜெனரேட்டர் பழுதானதால், அதை சரிசெய்ய மூவரும் வில்லியனுாரில் உள்ள ஜெனரேட்டர் பழுதுபார்க்கும் கம்பெனிக்குச் சென்று, பழுதுநீக்க ஏற்பாடு செய்தனர். பின் அங்கிருந்து சென்ற மூவரும் பள்ளித்தென்னல் பஸ் நிறுத்தம் அருகே பைக்கில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.அப்பொழுது புதுவைச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற வேன் பைக் மீது மோதியது. இதில் 3 பேரும் துக்கி எறியப்பட்டனர். இவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு அரியூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். வழியில் குமார், 50; பரிதாபமாக இறந்தார்.ரமேஷ் 45; ஏழுமலை 62; இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின் பேரில் கண்டமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி