உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பட்டாசு வெடித்த தகராறில் ஒருவர் கைது

பட்டாசு வெடித்த தகராறில் ஒருவர் கைது

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த மண்ணம்பூண்டியைச்சேர்ந்தவர் முருகன் மகன் சந்தோஷ், 19; தீபாவளி பண்டிகையின் போது, இரவு நண்பர்களுடன் 2 பைக்குகளில் தீவனுாரில் பெட்ரோல் பங்க்கிற்கு வந்துள்ளனர்.அப்போது அப்பகுதியில் ஒரு வீட்டிலிருந்து தீபாவளிக்காக ராக்கெட் விட்டபோது, சந்தோஷ் பைக் மீது விழுந்தது.இது தொடர்பாக சந்தோஷ் தரப்பினருக்கும், மோகன்தாஸ், 33; தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதில் சந்தோஷ் பலத்த காயமடைந்து திண்டிவனம் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்த புகாரின் பேரில், மோகன்தாஸ் உட்பட 4 பேர் ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து நேற்று முன்தினம் மோகன்தாசை கைது செய்தனர். மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை