மேலும் செய்திகள்
ஆடு திருட்டு போலீசார் விசாரணை
30-Mar-2025
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தடுத்தாட்கொண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி, 40; கோவுலாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன், 60; இருவரும் நேற்று காலை 7:00 மணிக்கு பெரியசெவலை - திருவெண்ணெய்நல்லுார் நோக்கி பல்சர் பைக்கில் சென்றனர். திருவெண்ணெய்நல்லுார் ஏரிக்கரை அருகே வந்தபோது பைக் நிலை தடுமாறி சாலையோர தடுப்பு சுவரில் மோதியது.இதில், பைக் ஓட்டிச் சென்ற மூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த முருகன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
30-Mar-2025