திறந்தவெளி தரைக்கிணற்றால் சென்னை சாலையில் விபத்து அபாயம்
திண்டிவனம்: திண்டிவனம்-சென்னை சாலை ஓரத்தில் உள்ள தரைக்கிணற்றால் விபத்து அபாயம் நிலவி வருகிறது.திண்டிவனம்-சென்னை சாலை, ஜக்காம்பேட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக நான்கு வழிச் சாலையில், சென்னை மார்க்க சாலை மூடப்பட்டுள்ளது.இதனால் அங்குள்ள சர்வீஸ் ரோட்டில், சென்னை மார்க்க வாகனங்கள் தற்காலிகமாக திருப்பி விடப்பட்டுள்ளது.இந்த சர்வீஸ் சாலையையொட்டி, திறந்த வெளி தரைக்கிணறு உள்ளது. தரைக்கிணறு உள்ள பகுதியில் எவ்வித தடுப்பும் இல்லாததால், இவ்வழியே குறிப்பாக இரவு நேரத்தில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அதற்கு முன்பாக தரைக்கிணறு உள்ள பகுதியில் தடுப்பு அமைக்க நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.