உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மேல்மலையனுார் பகுதியில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா

மேல்மலையனுார் பகுதியில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா

அவலுார்பேட்டை: அக். 21-: மேல்மலையனுார் பகுதியில் 61.77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 நாடக மேடை, 5 ரேஷன் கடை கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது. மேல்மலையனுார் அடுத்த வளத்தியில் செஞ்சி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 8.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழா நடந்தது. ஒன்றிய சேர்மன் கண்மணிநெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் விஜயலட்சுமி ஜெயகுமார் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., குத்து விளக்கேற்றி புதிய ரேஷன்கடை கட்டடத்தை திறந்து வைத்து பேசினார். ஒன்றிய துணை சேர்மன் விஜயலட்சமி , ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி, செல்வி ராமசரவணன் பங்கேற்றனர். இதே போல் வணக்கம்பாடி, கலிங்கமலை, கெங்கபுரம், சமத்தகுப்பம் கிராமங்களிலும் பகுதி நேர ரேஷன் கடை கட்டடங்களையும், தேவனுார், கெங்கபுரத்தில் நாடக மேடைகளையும் மஸ்தான் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி