புறக்காவல் நிலையம் திறப்பு
திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூர் கூட்ரோடு பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள புறக்காவல் நிலையம் திறப்பு விழா நடந்தது. இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமை தாங்கினார். ஏ.எஸ்.பி ரவீந்திரகுமாரகுப்தா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக எஸ்.பி., சரவணன் பங்கேற்று புறகாவல் நிலையத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அதே பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தொழிலதிபர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகரன், சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் அஸ்வினி சிவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல, சரவணபாக்கம் கூட்ரோடு பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையமும் திறந்து வைக்கப்பட்டது.