உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தீயணைப்பு துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகம் திறப்பு

தீயணைப்பு துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகம் திறப்பு

விழுப்புரம், ;விழுப்புரம் இ.எஸ்., கார்டன் பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. சென்னையில், காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். தொடர்ந்து கலெக்டர் கூறுகையில், 'தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டது. தற்போது இரண்டாக பிரித்து விழுப்புரத்தில் புதிய மண்டலம் 1.04 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தில் விழுப்புரம் மாவட்டடத்தில், 9 தீயணைப்பு நிலையங்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 9 தீயணைப்பு நிலையங்கள், கடலுார் மாவட்டத்தில், 16 தீயணைப்பு நிலையங்கள், நாகப்பட்டினம் மாவட்டத்தில், 14 தீயணைப்பு நிலையங்கள் உட்பட மொத்தம், 5 மாவட்டங்களில், 48 தீயணைப்பு நிலையங்கள் இந்த அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கும்' என்றார். எஸ்.பி., சரவணன், தீயணைப்பு துறை விழுப்புரம் மண்டல துணை இயக்குநர் தென்னரசு, திருச்சி மத்திய மண்டல துணை இயக்குநர் முரளி, மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் பாஸ்கரன் (விழுப்புரம்), அனுசுயா (கள்ளக்குறிச்சி) உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !