உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அறநிலைய துறை ஆய்வாளர் அலுவலகம் திறப்பு

அறநிலைய துறை ஆய்வாளர் அலுவலகம் திறப்பு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் இந்து அறநிலைய துறை ஆய்வாளர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.தமிழக அரசின் பொது நிதியிலிருந்து ரூபாய் 12 லட்சம் மதிப்பில், விக்கிர வாண்டி புவனேஸ்வரர் கோவில் வளாகத்தில், புதிய அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலகம் கட்டப்பட்டது.தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக ஆய்வாளர் அலுவலத்தை திறந்து வைத்தார். துவக்க விழா நிகழ்ச்சிக்கு அறநிலையத்துறை செயல் அலுவலர் அருள் தலைமை தாங்கினார். ஆய்வாளர் பல்லவி வரவேற்றார். விக்கிரவாண்டி பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம் குத்துவிளக்கேற்றி அலுவலக செயல்பாட்டை துவக்கி வைத்தார். இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் திருவாமாத்துார் கோவில் உட்பட 200 கோவில்கள் செயல்படும்.கோவில் குருக்கள் ரவி, பேரூராட்சி துணை சேர்மன் பாலாஜி, நியமனகுழு உறுப் பினர் சர்க்கார் பாபு, நகர செயலாளர் நைனாமுகமது, மாவட்ட தலைவர் அரிகரன், கவுன்சிலர் சுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ