உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கீழ் எடையாளத்தில் நாடக மேடை திறப்பு

கீழ் எடையாளத்தில் நாடக மேடை திறப்பு

திண்டிவனம்: கீழ்எடையாளம் கிராமத்தில் நாடக மேடை திறப்பு விழா நடந்தது.திண்டிவனம் அடுத்த கீழ்எைடயாளம் கிராமத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10.5 லட்சம் மதிப்பில் நாடக மேடை கட்டப்பட்டது. அதனை அர்ஜூனன் எம்.எல்.ஏ., நேற்று குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். அ.தி.மு.க., மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் நடராஜன், கீழ்சித்தாமூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகன், கிளை செயலாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !