உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கல்வி நிறுவன கட்டடங்கள் வரன்முறைப்படுத்த வாய்ப்பு

கல்வி நிறுவன கட்டடங்கள் வரன்முறைப்படுத்த வாய்ப்பு

விழுப்புரம்: மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கி வரும் கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைபடுத்த மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:தமிழகத்தில் திட்டமில்லா பகுதிகளில், கடந்த 2011 ம் ஆண்டு ஜனவரி முதல் தேதிக்கு முன், கட்டப்பட்டு, இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு, வரன்முறைபடுத்தும் திட்டத்தின் கீழ், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தாண்டு ஜூலை முதல் தேதியில் இருந்து வரும், 2026ம் ஆண்டு ஜூன், 30ம் தேதி வரை ஓராண்டு காலம் நீட்டிப்பு செய்து, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்ட வழிகாட்டுதல்களில், எவ்வித மாற்றமும் இல்லாமல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.tcponline.tn.gov.inஎன்ற இணைய தள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை