உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாவட்டத்தில் புதிய கேபிள் ஆபரேட்டர்களை நியமிக்க எதிர்ப்பு: அரசு கேபிள் டிவி நிறுவனம் நெருக்கடி தருவதாக புகார்

மாவட்டத்தில் புதிய கேபிள் ஆபரேட்டர்களை நியமிக்க எதிர்ப்பு: அரசு கேபிள் டிவி நிறுவனம் நெருக்கடி தருவதாக புகார்

விழுப்புரம், மார்ச் 18- விழுப்புரம் மாவட்டத்தில், மீண்டும் அரசு கேபிள் 'டிவி' ஒளிபரப்பை அதிகப்படுத்தவும், புதிய ஆபரேட்டர்களை நியமிக்கப் போவதாக அதிகாரிகள் நெருக்கடி தருவதற்கு கேபிள் 'டிவி' ஆபரேட்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் 25 ஆயிரம் கேபிள் 'டிவி' ஆபரேட்டர்கள் மூலம், ஒரு கோடி வீடுகளில் கேபிள் டிவி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இவர்கள், அரசு மற்றும் தனியார் கேபிள் நிறுவனங்கள் மூலம் கேபிள் இணைப்பை வாங்கி, சேனல்களை ஒளிபரப்பி வருகின்றனர்.இதில், குறைந்த கட்டணத்தில் நல்ல நிலையில் இயங்கி வந்த அரசு கேபிள் நிறுவனம், இடையே சில ஆண்டுகளாக புதிய செட்டாப் பாக்ஸ்களை வழங்காமலும், ஒளிபரப்பை சரியாக செய்யாமலும் இருந்தது.இதனால், தனியார் நிறுவனங்களின் செட்டாப் பாக்ஸ்களை வாங்கி, ஆப்பரேட்டர்கள் பலர் பயன்படுத்தி வந்தனர். இதனால் கேபிள் கட்டணமும் உயர்ந்துள்ளது.இந்நிலையில், தற்போது அரசு கேபிள் நிறுவனம், புதிய டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்களை கொள்முதல் செய்து, மீண்டும் ஆபரேட்டர்களுக்கு 500 ரூபாய்க்கு வழங்கி, குறைந்த மாத கட்டணத்தில் ஒளிபரப்பை அளித்து வருகிறது.ஆனால், இடையே, பல ஆபரேட்டர்கள் தனியார் நிறுவன சிக்னலுக்கு மாறி விட்டதால், தற்போது மீண்டும் அரசு கேபிள் இணைப்பை வாங்க மறுத்து வருகின்றனர்.இதனால், அரசு அதிகாரிகள், பழைய ஆபரேட்டர்கள் மீண்டும் அரசு செட்டாப் பாக்சை வாங்கி பயன்படுத்த வேண்டும், இல்லையெனில் புதிய ஆபரேட்டர்களை நியமித்து, அவர்கள் மூலம் இணைப்பு வழங்கும் பணி மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.இதில், அதிர்ச்சியடைந்துள்ள கேபிள் ஆபரேட்டர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இது குறித்து, விழுப்புரம் மாவட்ட கேபிள் 'டிவி' ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தினர் கூறியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 4 ஆண்டு களாக அரசு கேபிள் நிறுவனம் செட்டாப் பாக்ஸ்களை வழங்காமல் போன தாலும், அடிக்கடி ஒளிபரப்பு தடை பட்டதாலும் துயரத்தில் இருந்த ஆபரேட்டர்கள், தனியார் நிறுவனங்களின் செட்டாப் பாக்ஸ்களை வாங்கி ஒளிபரப்பி வந்தனர்.தற்போது, அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் 2 லட்சம் செட்டாப் பாக்ஸ்களை வாங்கி வந்து, ஆபரேட்டர்களுக்கு தலா 500 ரூபாய்க்கு வழங்குகிறது. அதனை வரவேற்கிறோம்.ஆனால், ஒட்டுமொத்தமாக தனியார் நிறுவன பாக்ஸ்களை அப்புறப்படுத்தி விட்டு, அரசு பாக்ஸ்களை பொருத்த வேண்டும் என அதிகாரி கள் நெருக்கடி தருகின்றனர்.இல்லையெனில் புதிய ஆபரேட்டர்களுக்கு ஒளிபரப்ப வாய்ப்பளிக்கின்றனர். இதனால், தொழிலில் போட்டியும், சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படும்.மேலும், தனியார் நிறுவனத்தில் வாங்கிய செட்டாப் பாக்ஸ்களை திருப்பி கொடுத்துவிட்டு, மீண்டும் அரசு பாக்ஸ் வாங்க வேண்டும். இதில் ஒளிபரப்பு தடை ஏற்பட்டால், வாடிக்கையாளர்களிடம் பிரச்னை ஏற்படும். ஆபரேட்டர்கள் பாதிக்கப்படுவார்கள்.இதனால், அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தினர், ஆபரேட்டர்களுக்கு நெருக்கடி கொடுப்பதையும். புதிய எல்.சி.ஓ.,க்களுக்கு அனுமதி வழங்குவதையும் நிறுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இது குறித்து, கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை