ஓவர் குடி: ஒருவர் பலி
விழுப்புரம்; விழுப்புரம் அடுத்த குமளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர்குரு, 36; திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். குடிப் பழக்கத்திற்கு அடிமையான சங்கர்குரு அடிக்கடி குடித்ததால் அவரது கிட்னி, நுரையீரல் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென வீட்டில் மயங்கி விழுந்தவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே சங்கர்குரு இறந்து விட்டதாக தெரிவித்தார்.வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.