உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வெளிநாட்டு வேலை: கலெக்டர் அறிவுரை

வெளிநாட்டு வேலை: கலெக்டர் அறிவுரை

விழுப்புரம்: வெளிநாட்டு வேலைக்கு செல்லும் நபர்கள், அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலமாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு; வெளிநாட்டு வேலைக்கு செல்லும் நபர்கள், இந்தியாவின் https://emigrate.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்த அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலமாகவே செல்ல வேண்டும். எந்த நிறுவனத்தில், எந்த முதலாளியிடம் வேலை செய்ய போகிறோம் போன்ற தகவல்களை முன்னதாக உறுதி செய்ய வேண்டும். வேலைக்கான ஒப்பந்தம், விசா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் பெற்ற பிறகே பயணிக்க வேண்டும். வேலை செய்யும் நாட்டின் சட்டங்கள், கலாச்சாரங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும். பல நாடுகளில் வேலைக்கு செல்லும் நபர், நாடு திரும்புவதற்கு வெளிச்செல் அனுமதி பெறுவது அவசியம். பதிவு பெறாத போலி முகவர்கள் மூலம் வேலைக்கு செல்லும் நோக்கத்தில் வெளிநாடு பயணிக்க கூடாது. சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது, அந்நாட்டில் சட்டவிரோதமாகக் கருதப்படும். இதனால், கைது, அபராதம் அல்லது சிறை தண்டனை கிடைக்கும். வெளிநாட்டு வேலை தொடர்பான சந்தேகங்களுக்கு மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிய வெளிநாடு தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் கட்டணமில்லா உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம். இந்தியாவிலிருந்து 1800 309 3793 என்ற எண்ணிலும், வெளிநாடுகளிலிருந்து 080 6900 9900, 080 6900 9901 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். அல்லது gmail.com/tn.gov.inஎன்ற இ மெயில் முகவரியிலோ, https://nrtamils.tn.gov.inஇணையதளத்திலோ தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி