உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தரமான நெல் விதைகளை விநியோகிக்க அறிவுறுத்தல்

தரமான நெல் விதைகளை விநியோகிக்க அறிவுறுத்தல்

விழுப்புரம்: சம்பா பருவத்திற்கு தரமான சான்று பெற்ற விதைகளை விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குநர் சரவணன் செய்திக் குறிப்பு: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலுார் மாவட்டங்களில் சம்பா பருவ நெல் சாகுபடிக்கான நாற்றாங்கால் விதைப்பு பணி துவங்கி நடந்து வருகிறது. இந்த மாவட்டங்களில் அனைத்து தனியார் மொத்த மற்றும் சில்லறை விதை விற்பனையாளர்கள் தரமான சான்று பெற்ற நெல் விதைகளை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு விநியோகிக்க வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து பெறப்படும் சான்று பெற்ற விதைகளுக்கு உரிய படிவம் மற்றும் தனியார் ரக உண்மை நிலை விதைகளுக்கான பதிவுச்சான்று, பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகல் ஆகியவற்றை தவறாமல் உற்பத்தியாளர்களிடம் பெற்று, ஆய்வின்போது காண்பிக்க வேண்டும். தற்போது மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, சி.ஆர்., 1009, சி.ஆர்., 1009 சப். 1, பி.பி.டி., போன்ற அறிவிக்கை பெற்ற ரகங்கள் மற்றும் இதர பிற மாநில, தனியார் சன்ன ரக விதைகள் அதிகளவில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சரியான சேமிப்பு முறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் விதை விற்பனை செய்ய தடை விதிப்பதோடு, உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்ச விற்பனை விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறுவோர் மீது உரிய விதை சட்டப்பிரிவுகளின்படி விற்பனை தடை, விற்பனை உரிமம் ரத்து மற்றும் கோர்ட் மூலம் தண்டனை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி