பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி
கண்டாச்சிபுரம், : கண்டாச்சிபுரம் பழனிவேலு மெட்ரிக் பள்ளியில் ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டி நடந்தது.நிகழ்ச்சிக்கு டாக்டர் மூர்த்தி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மேலாளர் செல்லம்மாள் வரவேற்றார். நிகழ்ச்சியில், மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா குறித்து கட்டுரைப் போட்டி மற்றும் ஓவிய போட்டியும் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டாக்டர் மூர்த்தி பரிசு வழங்கினார்.பள்ளி முதல்வர் நுார் முகம்மது மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.