உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வக்ர காளியம்மன் கோவிலில் பழனிசாமி தரிசனம்

வக்ர காளியம்மன் கோவிலில் பழனிசாமி தரிசனம்

வானுார்: திருவக்கரை வக்ர காளியம்மன் கோவிலில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார்.அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, நேற்று முன்தினம் விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனத்தில் பிரசாரத்தை நிறைவு செய்து விட்டு, ஓய்வெடுக்க வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார்.அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தவர் இரவு 11:30 மணிக்கு, திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலுக்கு சென்று, அம்பாளை தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்ட செயலாளர் சண்முகம், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு, சக்ரபாணி எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், பக்தவச்சலம், ராமதாஸ், கண்ணன், நகர செயலாளர் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.பவுர்ணமியன்று, காளிகாம்பாள் வழிபாடு விசேஷம் என்பதால், பழனிசாமி திருவக்கரையில், தரிசனம் செய்ததாக, கட்சியினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை