உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஊராட்சி அலுவலகம் திறப்பு விழா

ஊராட்சி அலுவலகம் திறப்பு விழா

திண்டிவனம்: வெள்ளிமேடுப்பேட்டையில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு விழா நடந்தது. ஒலக்கூர் அடுத்த வெள்ளிமேடுபேட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட் டம் மற்றும் 15வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி அலுவலக கட்டடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு, ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜாராம் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் மேனகா சரவணன் வரவேற்றார். விழாவில் மஸ்தான் எம்.எல்.ஏ., புதிய அலுவலக கட்டடத்தை திறந்து வைத்து, துாய்மைப் பணியாளர்கள், ஊராட்சி உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் மனோசித்ரா ராஜேஸ்வரன், ஒன்றிய கவுன்சிலர் அன்பரசி ஜெயபிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் சாந்தி ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை