மேலும் செய்திகள்
துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
21-Mar-2026
கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் போலீசார் மற்றும் துணை ராணுவ படை வீரர்களின் கொடி அணிவகுப்பு நடந்தது. தமிழகத்தில் சட்டசபை தேர்லையொட்டி, தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக விழுப்புரம் மாவட்டத்திற்கு எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளிக்கவும், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நேற்று கோட்டக்குப்பம் எம்.ஜி.ரோட்டில், கோட்டக்குப்பம் போலீசார் மற்றும் துணை ராணுவ படை வீரர்களின் கொடி அணிவகுப்பு நடந்தது. கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., ரூபன்குமார் தலைமையில் நடந்த கொடி அணிவகுப்பு பதற்றமான பகுதியாக கருத்தப்பட்ட கோட்டக்குப்பம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சப் இன்ஸ்பெக்டர்கள் நவநீதகிருஷ்ணன், ஏழுமலை மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் கணேசன், மாரிமுத்து பங்கேற்றனர்.
21-Mar-2026