உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்,; நிதி மசோதாவை ரத்து செய்யக்கோரி, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பொன்முடி தலைமை தாங்கினார். பொருளாளர் ரத்தினம் வரவேற்றார். துணை தலைவர்கள் திருநாவுக்கரசு, அண்ணாதுரை, இணை செயலாளர் லோகநாதன் முன்னிலை வகித்தனர். செயலாளர் அய்யாகண்ணு, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு புருஷோத்தமன், போக்குவரத்து துறை (சி.ஐ.டி.யு.,) மாவட்ட பொது செயலாளர் மூர்த்தி ஆகியோர் பேசினர்.இதில், ஊதியக்குழு பரிந்துரையில் இருந்து ஓய்வூதியர்களை நீக்கி வைக்கும் நிதி மசோதாவை ரத்து செய்ய வேண்டும்; ரயிலிலும், விமானத்திலும் மூத்த குடிமக்களுக்கான பயண சலுகை வழங்குதல்; சுகாதார காப்பீட்டு திட்டத்தை மாநில அரசு நடத்துதல்; அனைத்து மருத்துவமனைகளிலும் ஓய்வூதியர்களுக்கு இலவச மருத்துவம் வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.வட்ட செயலாளர் ராஜரத்தினம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி