மேலும் செய்திகள்
மொபட் மீது பைக் மோதி ஒருவர் பலி
16-Mar-2025
நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
05-Mar-2025
அவலுார்பேட்டை : மேல்மலையனுார், அவலுார்பேட்டை பகுதிகளில் நாய்களை கட்டுப்படுத்தவும், அப்புறப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.மேல்மலையனுார், அவலுார்பேட்டை பகுதியில் தெரு நாய்கள் அதிகளவில் உள்ளன. இவகள் கூட்டமாக வலம் வருகின்றன. இரு பைக்கில் செல்பவர்களை துரத்திச் சென்று கடிக்க பாய்கின்றன. இதனால், கீழே விழுந்து படுகாயமடைகின்றனர்.கடந்த 3 மாதங்களில் 40க்கும் மேற்பட்டோர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு, அவலுார்பேட்டை, மேல்செவலாம்பாடி, மேல்மலையனுார் ஆரம்ப துணை சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்றுள்ளனர்.எனவே, அவலுார்பேட்டை, மேல்மலையனுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெரு நாய்களை அப்புறப்படுத்தவும், அவைகளின் இன விருத்தியை கட்டுப்படுத்திட தடுப்பூசி செலுத்தவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
16-Mar-2025
05-Mar-2025