மேலும் செய்திகள்
துாக்கு போட்டு வாலிபர் தற்கொலை
13-May-2025
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சங்கராபுரம் அடுத்த முரார்பாளையம் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, கள்ளக்குறிச்சி பிரதான சாலை பகுதியில் உள்ள, மின்மாற்றி நேற்று முன்தினம் பழுதானது. இதனால் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். நேற்று மாலை வரை மின் வினியோகம் சரி செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதியில் குடிநீர் வினியோகம் தடைபட்டது.அதைக் கண்டித்து, இரவு, 7:00 மணிக்கு சங்கராபுரம்-கள்ளக்குறிச்சி சாலை, முரார்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே அப்பகுதிமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அங்கு விரைந்து சென்ற சங்கராபுரம் போலீசார் மற்றும் மின் வாரிய அதிகாரிகள், உடனடியாக மின்சாரம் வழங்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, மக்கள் கலைந்து சென்றனர். மறியலால், அச்சாலையில் 40 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
13-May-2025