உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீடூர் அணையில் குவிந்த மக்கள் 

வீடூர் அணையில் குவிந்த மக்கள் 

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணையை காண பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று பொதுமக்கள் கோவிலுக்கும் ,சுற்றுலா தலங்களுக்கும் சென்று மகிழ்ச்சியுடன் விடுமுறையை கொண்டாடினர் . மயிலம் முருகன் கோவிலுக்கு சென்று தரிசித்த பொதுமக்கள் பலர் வீடூர் அணையில் நீர் நிரம்பியுள்ளதை காண குவிந்தனர். பள்ளிச்சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விடுமுறையை கொண்டாட அணையை பார்வையிட்டு பின்னர் அங்குள்ள பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர்.அணையில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்ததால் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ