உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அடிப்படை வசதி கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதி கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

வானுார்: அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வானுார் தாலுகா, ஆகாசம்பட்டு பெருமாள் நகர், மகாலட்சுமி நகர், சீனிவாசன் கார்டன், சிவாலய நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு, கடந்த பல ஆண்டுகளாக கழிவு நீர், சாலை வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள், திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வானுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடியிருப்பு நலச்சங்க தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தேவேந்திரன், செயலாளர் அய்ய னார், துணை செயலாளர் கள் பிரதாப், மீனா பொருளாளர் திரிபுரசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் இமயம் சேகர் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். நிர்வாகிகள் ராமச்சந்திரன், மாசிலாமணி உள்ளிட்டார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !